டும்….டும்….டும்….! நடிகை காயத்திரி கிருஷ்ணாவுக்கு திருமணம்….!!!
கேரளாவை சேர்ந்தவர் காயத்ரி கிருஷ்ணா. தமிழில், ஜோக்கர், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சமுத்திரக்கனி ஜோடியாக சங்கத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சிமலை படத்தில் காயத்திரியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் காயத்ரி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். காயத்ரியின் குடும்ப நண்பரும், கன்னட சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருப்பவருமான ஜீவன் ராஜன் எனபவரை திருமணம் செய்கிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். இப்பொது இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்தது. திருமண தேதி இன்னும் முடிவாக இல்லை. இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் இருக்கும் என்று குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.