பிரபல பின்னணிப் பாடகி மற்றும் பின்னணிக் குரல் ஆர்ட்டிஸ்ட் ஆக உள்ளவர் சின்மயி. பாடகி டப்பிங்குமா என்றால் ஆமாம் டப்பிங்க் செய்வர் குறிப்பிட்டு சொன்னால் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த படம் 96
இந்த படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் சின்மயி.மேலும் படத்தில் நடிகை த்ரிஷா பாடும் பாடல்கள் அனைத்தும் இவரே பாடியிருந்தார். இந்நிலையில் தற்போது டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தெரிவித்த சின்மயி தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் உள்ள சின்மயி, இதுகுறித்து ட்வீட்டரில் தெரிவித்துள்ளார் அதில் நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை என்று காரணம் சொல்லப்பட்டு டப்பிங் யூனியனில் எனது உறுப்பினர் என்ற உறுப்பினர் இல்லை என்று நீக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் இல்லாத ஒருவர் தமிழில் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது.ரத்து செய்தது எதற்கு என்றால் நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என்று எனது மெம்பர்ஷிப் ரத்து செய்து உள்ளனர்.ஆனால் ரத்து செய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத் தான் எனக்கு தெரிகிறது.
சரி நான் நிர்ணயிக்கப்பட்ட அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்த இரண்டு வருடத்தில் எனது சம்பள பணத்தில் 10 சதவிகிதத் தொகையை யூனியன் எடுக்கத் தவறியதே இல்லை. தமிழில் ’96 தான் எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது.மேலும் டப்பிங் யூனியனின் இந்த நீக்கம் தொடர்ந்தால் ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடித்த கொண்டது மகிழ்ச்சியே. பை! பை!” என்று உருக்கமாகக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
DINASUVADU
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…