ஜேம்ஸ் பாண்டாக மீண்டும் மாறும்டேனியல் கிரெய்க்..!!
பிரபல துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் மீண்டும் நடிக்க டேனியல் கிரெய்க் ((Daniel Craig)) ஒப்புக் கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் படம் கடந்த 3 ஆண்டுகளாக வெளியாவில்லை. டேனியல் கிரெய்க் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு ஸ்பெக்ட்ரா ((Spectre)) என்ற படம் வெளியானது. அதனையடுத்து இனி, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்கப் போவதில்லை என 50 வயதான டேனியல் கிரெய்க் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டேனி போயல் ((Danny Boyle)) இயக்கத்தில் 5வது முறையாக ஜேம்ஸ் வேடத்தில் நடிக்க கிரெய்க் ஒப்புக் கொண்டுள்ளார். பாண்ட் 25 ((Bond 25)) என்ற இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வர உள்ளது. முன்னதாக கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால் மற்றும் ஸ்பெக்ட்ரா உள்ளிட்ட படங்களில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்