Categories: சினிமா

ஜெயலலிதா வேடத்தில் பிரபல நடிகை..!!

Published by
Dinasuvadu desk
‘‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறாரா?’’ என்பது பற்றி கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
‘‘சண்டக்கோழி–2 படத்தில் குறும்புக்கார கிராமத்து பெண்ணாக வருகிறேன். முதலில் இந்த படத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. டைரக்டர் லிங்குசாமி கதை சொன்னதும், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சாவித்திரியாக நடித்த நடிகையர் திலகம், சண்டகோழி–2 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி நடித்தேன். சாவித்திரியாக கனமான கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு சண்டக்கோழி இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் இதமான உணர்வு ஏற்பட்டது
நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் எனது கதாபாத்திரங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து கதைகளை தேர்வு செய்கிறேன். வணிக ரீதியிலான படங்களில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையல்ல. இனிமேல் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன்.
காலத்துக்கும் பெயர் சொல்வது மாதிரி சாவித்திரி கதாபாத்திரம் எனக்கு அமைந்து விட்டது. அது போதும் என்று நினைக்கிறேன். விமானநிலையத்தில் முதியவர் ஒருவர் என்னை பார்த்து நீங்கள் சாவித்திரிதானே என்று கேட்டார். அந்த அளவுக்கு எல்லோரையும் அது கவர்ந்து இருக்கிறது.
சண்டக்கோழி 3–ம் பாகம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். சமீபத்தில் ரூ.10 ஆயிரம் கடனுக்காக 10 வருடங்கள், 15 வருடங்கள் என்று கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களின் கதையை கேட்டு வேதனைப்பட்டேன். இப்படியும் நடக்குமா என்று எனக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர்களை மீட்டு கொண்டு வந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தேன். எனக்கு கவிதை எழுதும் பழக்கம் உள்ளது. படத்துக்கான கதை எழுதவும் ஆர்வம் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
DINASUVADU

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

15 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

16 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

16 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

17 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

17 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

17 hours ago