ஜூலி படத்துல இருக்க கூடாது? ஏன் நடிக்க கூடாது என யாரும் கூறவில்லை?ஜூலி
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி மேலும் பிரபலம் அடைந்தார். இவர் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர்துறந்த அனிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறார்.
எஸ் அஜெய் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படம் பற்றி பேசிய நடிகை ஜூலி, நீட் தேர்வுக்கான ஒரு விழிப்புணர்வாக இந்த படம் இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், இந்த படத்தில் தான் நடிக்க எதிர்ப்பு வந்ததாகவும் ஏன் நடிக்க கூடாது என யாரும் கூறவில்லை என தெரிவித்த அவர், இந்த படத்தின் மூலம் கூற வரும் கருத்துகள் மக்களை சென்றடைகிறதா என்பதே விஷயம் என தெரிவித்தார்