ஜி.வி.பிரகாஷிற்கு தேசிய விருது காத்திருக்கிறது! பிரபல இயக்குனரை சிலிர்க்க வைத்த ‘சர்வம் தாளமயம்’
ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் மிருதங்க வித்வானாக ஆசைப்பட்டு அதனால் அவன் கடந்து போகும் பாதைகளை இயக்குனர் படமாக்கியுள்ளார். இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற 31வது திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இப்படத்தை பார்க்க திரைபிரபலங்களுக்கு சிறப்பு காட்சி சென்னையில் காண்பிக்கப்பட்டது. அந்த சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் வசந்தபாலன் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அதனை தனது இணைய பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் படத்தை பற்றி கூறியதாவது, ‘படத்தில் ஜிவி.பிரகாஷ் பிரமாதமாக நடித்துள்ளார். இப்படத்தில் பீட்டராக ஜிவி.பிரகாஷ். இந்த பீட்டர் கேரக்டரை ஜிவி.பிரகாஷ் தவிர யாராலும் செய்ய முடியாது. படத்தில் ஜி.வி.பிரகாஷ் அழுகை, கோபம், குருபக்தி, ஏக்கம் , தடுமாற்றம், காதல் என பல விதமாக நடித்துள்ளார். என பாராட்டியுள்ளார்.
source : cinebar.in
https://www.facebook.com/vasanta.balan/photos/a.1642480246030222/2281434722134768/?type=3