ஜாதி ஆணவ கொலைகளுக்கு எதிரான உடுமலைப்பேட்டை சங்கரின் தீர்ப்பை வரவேற்ற ஜி.வி.பிரகாஷ்…!

Default Image

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த வருடம்   காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் மற்றும்   கௌசல்யா இருவரும் விடுமுறை தினத்தை முன்னிட்டு உடை மற்றும் பொருள்கள் வாங்க சென்றனர். அப்போது கௌசல்யா குடும்பத்தை சேர்ந்த சிலரின் தூண்டுதலின் பெயரில் சிலர் இருவரையும் கொலைவெறியுடன்    பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.இதில்  சிகிச்சை பலனின்றி    மருத்துவமனையில் இறந்தார்.இந்நிலையில் சங்கரின் கொலைக்கு நீதி    கேட்டு பல மார்க்சிய,அம்பேத்காரிய,பெரியாரிய அமைப்புகள்     கௌசல்யாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.சட்ட போராட்டங்களையும் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் மேலும் ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்க கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி (வயது 40) தூண்டுதலில் கொலைச்சதி திட்டமிடப்பட்டு சங்கர் கொலை செய்யப்பட்டதால் அவருக்கு மரண தண்ட விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.அத்துடன் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (31), பழனியைச் சேர்ந்த மணிகண்டன் (25), திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தசெல்வக்குமார் (25), திண்டுக்கல் புதுப்பட்டிபொன்மாந்துரையைச் சேர்ந்த கலைதமிழ் வாணன் (24), திண்டுக்கல்லைச் சேர்ந்த மதன்(எ) மைக்கேல் (வயது 25) ஆகிய 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.அத்துடன் திண்டுக்கல் புதுப்பட்டியைச் சேர்ந்த தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜ் (23)என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. ஒவ்வொருவருக்கும் இரட்டை தண்டனைகௌசல்யா தந்தை சின்னச்சாமி உட்பட மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பேர் மீதும் இந்த கொலை வழக்கில் பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன எனக்கூறி ஒரு  சரியான தீர்பளித்தது என நடிகரும்,இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி வாழ்ந்த தமிழ்நாட்டில் மேலும் ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்க இப்படிப்பட்ட தீர்ப்பு தான் சிறந்த தீர்வு..
#JusticeforKausalya
Seeking justice for Hasini..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்