சைலண்டாக விஸ்வாசம் படக்குழுவில் இணைந்த முக்கிய பிரபலம்!
விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு சிவா – அஜித் கூட்டணியில் உருவாகும் நிலையில் `விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவரும் இணைந்திருப்பதாக கூற ப்படுகிறது.
ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித்துடன் மங்காத்தா படத்தில் பணிபுரிந்த பிரபல சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
அடுத்தகட்டமாக மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் வெள்ளை முடி, தாடியுடன் வந்த அஜித், அடுத்த கட்ட படப்பிடிப்பில் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது.
மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.