சேரனின் 'திருமணம்'! மேக்கிங் வீடியோவை நாளை வெளியிடும் படக்குழு!!!
தமிழ் சினிமாவில் பல நல்ல கதையம்சங்களுடைய படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். இவர் இயக்கும் படங்களில் குடும்ப உறவுகளை முக்கியப்படுத்தி குடும்பத்தோடு பார்க்கும் வண்ணம் படமெடுத்து பெயர்பெற்றவர். இவரது இயக்த்தில் அடுத்ததாக திருமணம் எனும் படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். இந்த படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி ஹீரோவாக நடிக்கிறார். மேலும் M.S.பாஸ்கர், தம்பி ராமையா ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இப்பபடத்தின் மேக்கிங் வீடியோ நாளை மாலை வெளியாக உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU