சென்னையில் பிரபல நடிகர் வீட்டில் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை!பீதியில் நடிகர்
நடிகர் பார்த்திபன் தன் வீட்டில் நகை திருடு போய்வுள்ளதாக புகார் ஒன்றை காவல்துறையில் அளித்துள்ளார்.
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சென்னை திருவான்மியூரில்உள்ள மேற்கு காமராஜரில் வசிக்கிறார். அவர் வீட்டில் ஒரு பகுதி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில் கடந்த ஏப்ரலில் வீட்டில் லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் திருடு போய்விட்டதாக போலீசில் புகார் அளித்தார்.
தற்போது மீண்டும் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபன், இன்னொரு அறையில் உள்ள நகைகளை திருடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மொத்தம் இரண்டும் சேர்த்து ஒன்றரை கிலோகிராம் தங்க நகைகள் திருடப்பட்டவை, என்று அவர் கூறிய நிலையில்,வீட்டில் வேலை பார்பவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக காவல்துறையிடம் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகர் பார்த்திபன் வீட்டில் போலீஸால் வேலை பார்க்கும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.