சென்சார் வழங்கியது சீனா! விரைவில் ரிலீசாகும் பாகுபலி 2’…..
சமீப காலமாக இந்தியப் படங்களுக்கு சீனா நாட்டில், பெரும் மவுசு இருந்து வருகிறது. சென்ற ஆண்டு சீனாவில் வெளியான ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் சுமார் 1500 கோடிக்கும் மேல் வசூலானது .சல்மான் கானின், ‘பஜ்ரங்கி பைஜான்’ சில வாரங்களுக்கு முன் வசூல் 200 கோடியை தாண்டியது.
அரசியல் சூழ்நிலை காரணமாக ‘பாகுபலி 2’ படம் சீனாவில் வெளியிட முடியவில்லை.தற்போது ‘பாகுபலி 2’ படத்திற்கு சென்சார் கிடைத்துவிட்டதால், படத்தின் முதல் பாகத்தை வெளியிட்ட நிறுவனமே இரண்டாவது பாகத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளது. இதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.