செக்க சிவந்த வானம் படத்தில் பெரியாரின் குத்து பாடல் ..!
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிம்பு நடிப்பை தாண்டி பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரம் எடுத்து வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ‘பெரியார் குத்து…’ என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்த பெரியார் குத்து பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசைமைக்க மதன் கார்க்கி வரிகள் அமைத்துள்ளார். தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு இந்த ஆல்பத்தை தயாரிக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.