சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரை விமர்சனம்…!!
பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ‘ஸ்பெஷல் 26’. இதன் ரீமேக்கில் தான் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார். சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா சிபிஐ.க்கும் போலிஸ் வேலைக்கு கலையரசனும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல், மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது. அந்த விரக்தியில் கலையரசன் தற்கொலை செய்து கொள்ள அதன்பின், சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டு, போலி சி.பி.ஐ.களாக செயல்பட்டு அரசாங்கத்தில் உள்ள தவறான நபர்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் காமெடியில் கலக்கியுள்ளார். சீனியர் நடிகரான செந்திலுக்கு இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்திருப்பது சிறப்பு. சில காட்சிகளில் வந்தாலும், ஆனந்த் ராஜ் முதல்கொண்டு, ஆபிசர் கதாபாத்திரத்தில் வரும் கார்த்தி, மற்றும் நாயகி கீர்த்தி சுரேஷ் ஆகியோருடைய நடிப்பும் மனதில் நிற்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அனிருத்தின் துள்ளலான இசை, தினேஷின் கலர்புல்லான ஒளிப்பதிவு, படத்தின் வசனம் அனைத்தும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியும், கிளைமேக்ஸும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிறப்பு என்று கூறலாம்.
இப்படத்தின் டீஸர்
https://youtu.be/hYM_iZII4U4