சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த கூட்டணி இவருடனா..!
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முருகதாஸும் ஒருவர். இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
முருகதாஸ் தமிழில் தொடர்ந்து 3 முறை விஜய்யுடனே பணியாற்றி வருகின்றார், இவர் அடுத்து உடனே தமிழில் ஒரு படத்தை எடுக்கவுள்ளாராம்.அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.