2.Oபடத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வேகமாக பட வேலைகளை பார்த்து வருகிறது. பொங்கலுக்கு ஏற்கனவே தல அஜித் நடிக்கும் விசுவாசம் திரைப்படமும், சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் வெளிவர உள்ளது.
பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இப்படத்திலிருந்து நேற்று அனிருத் இசையில் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் அனிருத் ஆகியோர் பாடி இருந்தனர். இப்பாடலை தொடர்ந்து இன்று விஜய் சேதுபதியின் லுக்கையும், அவரது கதாபாத்திரத்தின் பெயரையும் அறிவித்துள்ளனர். அதில் அவரது பெயர் ஜித்து எனவும், அவர் துப்பாக்கியுடன் வில்லன் போல அமர்ந்திருக்கும் படி போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
source : cinebar.in
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…