சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் ? ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி?
பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், ஆல்கஹால் கலந்த மதுவகைகளை அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹோட்டலின் சிசிடிவி பதிவுகளுக்கு என்ன நேரிட்டது எனவும் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுள்ளார். ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார் என திடீரென டாக்டர்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் வினவியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலும் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் பாலிவுட் நடிகைகளுக்கும் தாவூத் இப்ராகிமிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் யோசிக்க வேண்டியிருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதனிடையே, ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஸ்ரீதேவியின் மரணம் கொலையாகக் கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.