சீனாவில் கால் பதிக்கும் முதல் தமிழ் படம் மெர்சல்…! ‘தங்கல்’, ‘பாகுபலி’ வரிசையில் இணைகிறது …!
கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும்.
தற்போது வரை படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போது விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் சீனாவில் திரையிடப்பட இருக்கிறது.எச்.ஜி.சி. நிறுவனம் இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் ‘தங்கல்’, ‘பாகுபலி’ போன்ற இந்தியப் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியப் படங்களின் கதைகளை வெளிநாட்டவர்கள் விரும்ப ஆரம்பித்திருப்பதால், இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது. ‘மெர்சல்’ சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.