சிவாவிற்கு வாய்ப்பு அளித்தது குறித்து அஜித்
சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வீரம்’ ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ என்று தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துள்ளார். இதில் முதல் இரண்டு படங்கள் நல்ல வரவேற்பினை மக்களிடையில் பெற்றது. ஆனால் ‘விவேகம்’ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. எனினும், அஜித் தனது 4வது படமான’விஸ்வாசம்’த்தில் சிவாவிற்கு வாய்பளித்துள்ளார். இதுக்குறித்து அஜித் தன் நட்பு வட்டாரத்தில் கூறுகையில் ‘சிவா எனக்கு ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார், அவர் வேறு ஒருவருடன் படம் இயக்க செல்லும் போது ஹிட் இயக்குனர் என்ற பெயரில் தான் செல்ல வேண்டும். அதற்காக தான் இந்த வாய்ப்பு’ என்று கூறினாராம். மேலும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் சிவா இப்படத்திற்கு இயக்குனராக கமிட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது