“சிவகார்த்திகேயன் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் “
அடுத்த பிக்பாஸை தொகுத்து வழங்க போவது அவரே சொன்ன பதில்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக பொன்ராம் இயக்கியுள்ள சீமராஜா வருகிற 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் பல கேள்விகளுக்கு இடையே, நீங்கள் ஆங்கராக இருந்து தான் நடிகராகியுள்ளீர்கள், அதனால் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸின் அடுத்த சீசனில் உங்களை தொகுத்து வழங்க அழைத்தால் செல்வீர்களா? என்ற ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது.
அவரை தூக்கிவிட்ட தொலைக்காட்சியை மறக்கமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் தொகுத்து வழங்கமாட்டேன் என கூறிவிட்டார்.தொடர்ந்து பேசிய அவர், ”இப்போ நாம சினிமாவுக்கு வந்துவிட்டோம், ஆங்கராக நான் நிறைய செய்துவிட்டேன், இப்போது நடிப்பில் தான் என்னோட திறமையை காட்ட வேண்டும்” என அவர் கூறினார்.
DINASUVADU