சிவகார்த்திகேயனின் கனா படத்தின் முக்கிய அறிவிப்பு…!!
பாடகர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் தற்போது அவருடைய இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் கனா இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கும் படம் கனா இந்த படத்தை நடிகரும், பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் கனா இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.
நடுத்தர வீட்டு வர்க்க பெண் ஒருவர் தேசிய அளவில் கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் தான் கனா.கிரிக்கெட்டை மையப்படுத்தி எத்ணை படங்கள் வந்தாலும் சினி உலகில் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றார். இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் . இதனால் படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய மகள் சேர்ந்து பாடிய வாயாடி பெத்தபுள்ள வரப்போரான் நல்லபுள்ள பாட்டு படுவைரலாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/SKProdOffl/status/1063047959107883008
DINASUVADU