சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் இந்த தலைப்பா?! படக்குழுவினர் குழப்பம்!!

Default Image

சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தை அடுத்து இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்தின் தலைப்பு அசால்ட் என சிலர் கூறி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை தயாரிப்பு தரப்பும் இதுவரை மறுக்கவில்லை.

ஆனா, இதே தலைப்பை வேறு  ஒருவர், சங்கத்தில் பதிவு செய்து அதனை படமாக்கியும் வருகின்றனர். அசால்ட் என்று தலைப்பு பரவி வருவதும்,அதனை சிவகார்த்திகேயன்  படக்குழு மறுக்காமல் இருப்பதும் இந்த படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்