சிலுக்குவார்பட்டி சிங்கம் பட ட்ரெய்லரை நாளை ரிலீஸ் செய்யபோகும் சிங்கம்!!
தனது நல்ல கதை தேர்வின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாத டிசம்பர் 21இல் வெளிவரவுள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்தபடத்துடன் இன்னும் நான்கு படங்கள் வெளிவரவுள்ளன.
போட்டி பலமாக உள்ள சூழ்நிலையில் தைரியமாக தனது படத்தை இறக்குகிறார் விஷ்ணு விஷால். இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. இந்த ட்ரெய்லரை நாளை மாலை 6 மணிக்கு சூர்யா வெளியிடவுள்ளார். இதனை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
DINASUVADU