அங்கு ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் ‘வெளி மான்’ (பிளாக் பக்) என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, மேற்குறிப்பிட்ட நடிகர்களும் அவருடன் இருந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பான 20 ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான் கானை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளித்து உத்தரவிட்டது.இவ்வழக்கிலிருந்து சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறும்போது, ”சல்மான் கான் சிறுபான்மையினர் என்பதால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை. இந்தியாவை ஆளும் கட்சியைச் சேர்ந்த மதத்திலிருந்து சல்மான் கான் வந்திருந்தால் அவருக்கு இம்மாதிரியான கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்காது” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.