சியான் விக்ரம் பொங்கலுக்கு போட்ட “ஸ்கெட்ச்” அதிகாரபூர்வ அறிவிப்பு..!
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது.
இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் இறுதியில் வெளியிட உள்ளதாகவும் தமன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சித்ஸ்ரீராம் , ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.
மேலும் இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆகையால் பொங்கல் ரேஸில் சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” படமும் இணையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என இந்த அறிவிப்புகள் நமக்கு தெரிவிகின்றன.இதனால் சியான் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர்.
Official #Sketch January release!! #Chiyaan #Vikram @tamannaahspeaks @vijayfilmaker @MusicThaman pic.twitter.com/da7XKsRTEk
— Kalaippuli S Thanu (@theVcreations) December 14, 2017