சியான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தின் 'வரமாட்டேன்னு நினைச்சியா' ப்ரோமோவைத்தொடர்ந்து 'தாடிக்காரா' பாடலின் ப்ரோமோ லிரிக் வீடியோ இன்று மாலை வெளியீடப்பட உள்ளது
சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ‘வரமாட்டேன்னு நினைச்சியா’ ப்ரோமோவைத்தொடர்ந்து ‘தாடிக்காரா’ பாடலின் ப்ரோமோ லிரிக் வீடியோ இன்று மாலை வெளியீடப்பட உள்ளது..
வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சியான் விக்ரம், தமன்னா ஜோடியாக நடித்து வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘மூவிங் பிரேம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ‘வரமாட்டேன்னு நினைச்சியா’ என்ற ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் ‘தாடிக்காரா’ எனத்தொடங்கும் பாடலின் ப்ரோமோ லிரிக் வீடியோவானது வெளியாக உள்ளது.
இதனையும் சியானின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.