சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் “சீனி சில்லால்லே” எனத்தொடங்கும் 3வது பாடல் இன்று வெளியீடு…!
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சித்ஸ்ரீராம் , ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.
மேலும் இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ‘அட்சிபுட்சி’ எனத்தொடக்கும் லிரிக் தனிப்பாடலானது வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் 3வது லிரிக் தனிப்பாடலானது இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் ஸ்கெட்ச் படக்குழு அதிகார்பபூர்வ அறிவிப்பு செய்துள்ளது.சீனி செல்லாலே என்பது ஒரு காதல் பாடல் ஆகும்.
இதனை ரசிகர்கள் facebook மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் #ChiyaanVikram #AtchiPutchi #decembermelody #Sketch எனப்பதிவிட்டு டிரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். பொங்கல் ரேஸில் சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” படமும் இணையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என இந்த அறிவிப்புகள் நமக்கு தெரிவிகின்றன.இதனால் சியான் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர்.