சியான் விக்ரமின் ஸ்கெட்ச் இசை வெளியீடு அறிவிப்பு
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ஸ்கெட்ச் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் பாடல்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட உள்ளதாக இப்படத்தின் கதாநாயகன் விக்ரம் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்பத்தை கலைப்புலி தாணு தனது V சிரியேசன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.