சியான் விக்ரமின் 'சாமி-2' குறித்து இயக்குனர் ஹரி கூறிய தகவல்…!!
சாமி-2 படமானது சியான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது. இதனையடுத்து தற்போது நெல்லையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சர்ச்சைகள் குறித்து இயக்குனர் ஹரி பேசியுள்ளார். அப்போது அவர், “சாமி-2 படத்தில் கீர்த்தி, த்ரிஷா இருவருமே நடிக்கின்றனர், த்ரிஷா இல்லை என்பது வதந்தி மட்டுமே. மேலும், படத்தில் 5 சண்டைக்காட்சிகள் உள்ளது, அதில் 2 சேஸிங் காட்சிகள், 5 பாடல்கள் படத்தில் உள்ளது” என்று கூறியுள்ளார்.