மலையாள நடிகர்களான திலீப் – காவ்யா மாதவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
மலையாள நடிகரான திலீப், நடிகை மஞ்சு வாரியரை 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2000-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மீனாட்சி எனப் பெயரிட்டனர். அதன் பின்னர் திலீப் – மஞ்சு வாரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால், 2015-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.