தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை டாப்ஸி பாலிவுட்டில் போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக டாப்ஸியை தேடி வந்தது.கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து அபார நடிப்பால் அசத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று அளித்த பபேட்டியில் தனி மனுஷியாக எனக்கு தோல்வியை கண்டு பயம் இல்லை. அதை நீங்கள் திரையில் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தோல்வி ஏற்பட்டால் அத்துடன் வாழ்க்கையே முடிந்துவிடுமா என்ன? நான் மீண்டும் முயற்சி செய்வேன். என் படங்கள் தோல்வி அடைந்தால் நான் வேறு ஏதாவது செய்வேன். அத்துடன் என் வாழ்க்கை முடிந்துவிடாது என்று நம்பிக்கையுடன் பேசினார் நடிகை டாப்ஸி.
படங்களோடு என் வாழ்க்கை முடிந்துவிடுவது இல்லை. அந்த தைரியமும், நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது.நானும் என் தங்கை ஷகுனுடன் சேர்ந்து உணவகம் துவங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். சினிமா துறைக்கு சம்பந்தமில்லாத பிற விஷயங்களையும் செய்ய விரும்புகிறேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகுவது என்றால் அதனுடன் தொடர்பில்லாத பிற தொழில் என் கைவசம் இருக்க வேண்டும். சினிமாவை தாண்டி வாழ்க்கை இருப்பது நல்லது என்று தெளிவாக பேசுகிறார் டாப்ஸி. அவர் திருமண வேலைகள் அனைத்தையும் செய்து கொடுக்கும் வெட்டிங் பிளானர் தொழிலை டாப்ஸி சைட் பிசினஸ் செய்து வருகிறார்கள்.என்னுடைய கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கத் துவங்கிவிட்டது என்று நடிகை டாப்ஸி தெரிவித்தார்…
DINASUVADU
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…