சிந்துபாத் கதை போல முடிவே இல்லாமல் நீண்டுக்கொண்டே போகும் ஸ்ரீ லீக்ஸ்சின் லீலலைகள் …!
அடுத்தது யார் என்ற பரபரப்பு ‘ஸ்ரீ லீக்ஸ்’ புகழ் நடிகை ஸ்ரீரெட்டியின் ஹிட் லிஸ்ட்டில் திரை உலகினரை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது.
இயக்குநர் சேகர் கமுல்லா, நடிகர் ராணாவின் தம்பி ஆகியோரைத் தொடர்ந்து திரைக்கதாசிரியர் கோனா வெங்கட் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது அவதூறு கூறுவதாக தெலுங்கு ஃபிலிம் சேம்பர் அவரது உறுப்பினர் அட்டையை ரத்து செய்தது.
இதற்கு தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி ஃபிலிம் சேம்பர் அருகில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பினார்.
அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம் ஸ்டூடியோவில் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் தொந்திரவு செய்ததாக புகைப்படத்துடன் அம்பலப்படுத்தினார்.
தற்போது பிரபல திரைக்கதாசிரியரும், இயக்குநருமான கோனா வெங்கட் தன்னிடம் அசடு வழிந்த வாட்ஸ்-அப் உரையாடலை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஸ்ரீரெட்டி பகிர்ந்துள்ள வாட்ஸ்-அப் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டை மறுத்த கோனா வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :
“நான் உட்பட சில சினிமா பிரபலங்கள் மீது நடிகை ஒருவர் கூறும் அடிப்படை ஆதரமற்ற புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நடிகையின் இந்த புகார் குறித்து விசாரித்து யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நடிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.