சர்கார் திரைப்பட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
AR முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. சர்கார் படத்தின் முதல் தோற்றத்தில் (FIRST LOOK), விஜய் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது.
இந்த படத்தின் முதல் தோற்றத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் பொதுச்சுகாதாரத்துறை இயக்குனர் முருகதாஸ்,நடிகர் விஜய்,படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோருக்கு புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றதால் நோட்டீஸ் அனுப்பியது.மேலும் அந்த காட்சியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் கோரிக்கை விடுத்தது.
பின்னர் சர்காரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.
இந்நிலையில் அடையாறு புற்று நோய் மருத்துவ மையம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்கக்கோரி வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.பின்னர் சர்கார் திரைப்பட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480…
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…
ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…