சாதனை படைக்க ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்த வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது….!!!
வைக்கம் விஜயலக்சுமி பார்வை குறைபாடு கொண்டவர் என்றாலும் குரலுக்கு தமிழ், மலையாள சினிமாவில் ரசிகர்கள் அதிகம்.
அவர் தற்போது அனூப் என்கிற மிமிக்கிரி ஆர்ட்டிசை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்துள்ளது. திருமணம் வைக்கம் மஹாதேவர் கோவிலில் அக்டொபேர் 23ம் தேதி நடக்கும் என்று வியலக்சுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்ற வருடம் வைக்கம் விஜலக்சுமி ஒரு NRI மலையாளி ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அதன் பிறகு விஜயலக்சுமி பாடக்கூடாது என கண்டிஷன் போட்டதால் அந்த திருமணம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.