நடிகர் சல்மான் கான் மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கிய பின்னர் கடந்த 9 ஆண்டுகளில் ராஜஸ்தானில் மான்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மானான ‘கலைமானை’ வேட்டையாடியதாக சல்மான் கானுடன் மேலும் 4 நடிகர் நடிகைகள் மீது 1998ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலைமான் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு மான் இனமாகும்.
இந்த வழக்கில், இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கானுடன் நடிகர் சயிஃப் அலி கான் மற்றும் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோருடைய பெயர்களும் இருந்தன. ஆனால் சல்மான் கானை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மற்ற நால்வரையும் விடுவித்துள்ளது. தீர்ப்பு வரும் முன்பு பேசிய சல்மான் கானின் வழக்கறிஞர் ஹஸ்திமல், இது பொய் வழக்கு என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தானில் சல்மான் கான் வேட்டையாடிய கலைமான் இனம், கடந்த 2007-ஆம் ஆண்டு 14,701 என்ற எண்ணிக்கையில் இருந்தது. 2016-ல் அவற்றின் எண்ணிக்கை 30,530-ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…