சல்மான் கான் வேட்டையாடிய மான் இனத்தின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு..!

Default Image

நடிகர் சல்மான் கான் மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கிய பின்னர் கடந்த 9 ஆண்டுகளில் ராஜஸ்தானில் மான்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மானான ‘கலைமானை’ வேட்டையாடியதாக சல்மான் கானுடன் மேலும் 4 நடிகர் நடிகைகள் மீது 1998ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலைமான் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு மான் இனமாகும்.

இந்த வழக்கில், இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Image result for சல்மான் கான்

சல்மான் கானுடன் நடிகர் சயிஃப் அலி கான் மற்றும் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோருடைய பெயர்களும் இருந்தன. ஆனால் சல்மான் கானை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மற்ற நால்வரையும் விடுவித்துள்ளது. தீர்ப்பு வரும் முன்பு பேசிய சல்மான் கானின் வழக்கறிஞர் ஹஸ்திமல், இது பொய் வழக்கு என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் சல்மான் கான் வேட்டையாடிய கலைமான் இனம், கடந்த 2007-ஆம் ஆண்டு 14,701 என்ற எண்ணிக்கையில் இருந்தது. 2016-ல் அவற்றின் எண்ணிக்கை 30,530-ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்