சர்க்கார் திருடபட்ட கதை..என்னுடைய மகன் விஜய் ரசிகன்…நான் உண்மையாக இருக்க வேண்டும்…நடிகர் பேட்டி…!!
நடிகர் விஜயின் சர்க்கார் பட கதை செங்கோல் படத்தின் கதைதான், என் மகன் விஜய் ரசிகன் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நடிகர் கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க வெளியாகவுள்ள படம் சர்க்கார்.இந்த படத்தின் கதை திருட்டுக்கதை என்று பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் எழுத்தாளர் சங்க தலைவரும் , தமிழ் நடிகருமான கே.பாக்கியராஜ் அளித்த பேட்டியில் , நான் எழுத்தாளர் சங்க தலைவராக வந்ததும் என்னிடம் வந்த முதல் பஞ்சாயத்து செங்கோலன் கதைதான் சர்க்கார் திரைப்பட கதை. இதில் செங்கோலன் படத்தின் இயக்குனர் சர்கார் படம் மீது புகார் கொடுக்க வந்தார்.அப்போது வந்த அவர் கையில் பேப்பர் கட்டிங்குடன் வந்திருந்தார்.
அவர் கொண்டுவந்த பேப்பர் கட்டிங் செய்திக்கும் , செங்கோல் படம் தொடர்பாக அவர் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள கதைக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.செங்கோல் கதையில் தொடக்கத்தில் சட்ட கல்லூரி மாணவராக படித்த ஹீரோ ,காதல் என கதை தொடக்கி அதற்க்கு பிறகு தேர்தலுக்காக சொந்த ஊருக்கு செல்கிறார். சர்க்கார் படத்தில் வெளிநாட்டில் பெரிய கம்பெனி_யில் CO_வாக இருக்கும் விஜய் தேர்தலில் ஓட்டுப்போட வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். இந்த இரண்டு கதையிலும் ஒட்டு போட செல்லும் போது ஹீரோக்களின் ஓட்டை வேறு யாரோ போட்டு விடுகின்றனர் அதை தொடர்ந்து இரண்டு படங்களிலும் சண்டை என இரண்டு படத்தின் சாராம்சம் ஒன்றாகத்தான் இருக்கிறது.
இது குறித்து நான் இயக்குனர் முருகதாஸ்ஸிடம் பேசிய போது இல்ல சார் இது எனக்கு இம்ப்ரஸ் ஆன கதை.கடந்த 2002_ஆம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசன் ஓட்டு போட செல்லும் போது அவரின் ஓட்டை யாரோ போட்டுவிடுகிறார்கள் என்றார்.அதே போல இயக்குனர் முருகதாஸ் பச்சை என்ற பெயரிலும் சர்க்கார் கதையை பதிந்தது 2017ஆம் ஆண்டு.ஆனால் செங்கோல் கதை 2007_ஆம் ஆண்டிலே பதியப்பட்டுள்ளது.
நான் எதோ பணத்துக்காக , விஜய் பெரிய நடிகர் என சர்க்கார் படத்தின் மீது புகார் கூறவில்லை.யாராக இருந்தாலும் நியாயமாக சங்கத்துக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.ஆனால் நாதான் சரி “இதை இன்னும் அதிகமா விவாதிக்க வேண்டாமென்று” விட்டு விட்டேன்.இதில் முருகதாஸ்ஸூக்கு இது ஒரு பிரச்சனை தான் அவர் புகார் கொடுத்தவரை மட்டும் தான் எதிர்க்க வேண்டும்.சர்க்கார் படம் தொடர்பாக நான் சன் TV , என்னுடைய மகன் நடிகர் விஜய்யோட பயங்கர ரசிகன் எப்பவும் விஜய் அண்ணன் ,விஜய் அண்ண_னு இருப்பான் எனவே எனக்கு வீட்டில் தான் முதல் பிரச்னை , விஜயின் தந்தை சந்திரசேகரும் , நானும் நன்றாக பேசி வருகிறோம் இதனால் இது எல்லாமே பிரச்னை தான்.நான் நியாயமாக செயல்பட்டேனு வரணும் அது போதும் எனக்கு.இதே போல துணை முதல்வர் என்ற படம் இயக்க கதை வைத்திருந்த போது அதில் ஒரு சீன் வரும் அதில் “முதல் ஒட்டு உனக்கு தான் போட்டேன் , இரண்டாவது ஒட்டு அவனுக்கு போட்டேன்” என்ற சீன் நடிகர் வடிவேலு காமெடியாக வந்து விட்டது.ஆனால் அது என்னோட கதை என்று இயக்குனர் கே.பாக்கியராஜ் தெரிவித்தார்.தொடர்ந்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
dinasuvadu.com