சர்கார் ரிலீஸ்….பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்…!!!

Default Image

நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

 

மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார், நகைச்சுவை நடிகர் யோகிபாபு,பழ.கருப்பையா , ராதாரவி என நடிக பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் சர்கார் தீபாவளியான இன்று திரைக்கு அதிகாலை 4 மணியளவில் திரையிடப்பட்டது.

சென்னையில் பல்வேறு திரையருங்குகளில் திரையிடப்பட்ட சர்கார் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றுள்ளது.படம் வெளியான போதே ரசிகர்கள் பட்டாசு வெடித்தும்,நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீபாவளிக்கு சர்கார் இல்லை சர்காருக்கு தான் தீபாவளிக்கு என்று ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் உரக்க உரைக்கின்றனர்.சர்கார் தன் தடைகளை தகர்த்து இன்று திரையரங்குகளில் கம்மீரமாக தனது சர்காரை அமைத்துள்ளது.

DINASUVADU

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்