Categories: சினிமா

சர்கார் படத்தின் மூலம் அதிரடி வில்லியாக களமிறங்கும் வரலக்ஷ்மி ..!

Published by
Dinasuvadu desk
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் அமைய இருக்கிறது.
சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால்  இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் விஜய் ரசிகர்கள்.
சர்கார் திரைப்படத்தில் சரத்குமர் மகள் வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பதால், வரலட்சுமி இன்னொரு கதாநாயகியா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்து வந்தது. தற்போது சர்காரில் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து வெளியாகி இருக்கும் ஒரு செய்தி, அந்த சந்தேகங்களுக்கு விடை அளித்திருக்கிறது.
இந்த படத்தில் வரலட்சுமி ஒரு அரசியல்வாதியின் மகளாக நடித்திருக்கிறாராம். அதும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறாராம்.  இந்த ரோலில் அவர் வில்லியாக இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால், படையப்பா நீலாம்பரிக்கு பிறகு, மக்கள் மனதில் பதியப்போகும் அதிரடி வில்லி, வரலட்சுமி தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

23 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

34 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

56 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

58 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

1 hour ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

2 hours ago