சர்கார் படத்தின் மூலம் அதிரடி வில்லியாக களமிறங்கும் வரலக்ஷ்மி ..!
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் அமைய இருக்கிறது.
சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால் இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் விஜய் ரசிகர்கள்.
சர்கார் திரைப்படத்தில் சரத்குமர் மகள் வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பதால், வரலட்சுமி இன்னொரு கதாநாயகியா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்து வந்தது. தற்போது சர்காரில் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து வெளியாகி இருக்கும் ஒரு செய்தி, அந்த சந்தேகங்களுக்கு விடை அளித்திருக்கிறது.
இந்த படத்தில் வரலட்சுமி ஒரு அரசியல்வாதியின் மகளாக நடித்திருக்கிறாராம். அதும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறாராம். இந்த ரோலில் அவர் வில்லியாக இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால், படையப்பா நீலாம்பரிக்கு பிறகு, மக்கள் மனதில் பதியப்போகும் அதிரடி வில்லி, வரலட்சுமி தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.