சர்கார் சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும்……திரையரங்க உரிமையாளர் தகவல்..!!
சர்கார் படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகள் நீக்கப்படும் என்று திரைப்பட உரிமையாளர் சங்க நீர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தை ஒரு அடி ஓங்கி அடித்துள்ள படம் தான் சர்கார்.தீபாவளி அன்ற்ய் வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்று திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் இடையில் சர்ச்சையில் சிக்கி தற்போதும் சர்ச்சையில் சிக்கியுள்ளது அந்த சர்ச்சை பிரச்சணை இப்பொழுது ஆளும் அரசாங்கத்தால் ஏற்பட்டுள்ளது.படத்தில் அரசை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று கொந்தளிக்கும் அரசியல் வட்டாரங்கள் விஜயின் பேனர்களை கிழித்தும் ,கடஅவுட்களை சேதப்படுத்தியும் ரகளையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இன்று தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் உடன் சர்கார் படத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.இந்நிலையில் தமிழகத்தின் பல்வோறு இடங்களில் விஜயின் பேனர் கிழிக்கப்பட்டது,படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது விஜய் ரசிகர்களை கோபமாடைய செய்துள்ளது விஜய் படம் என்றால் எத்தனை பிரச்சணை,எத்தணை விமர்சனம் அத்தணையும் தாண்டி படம் வந்தால் அதற்கு தடை வழக்கு என்று எத்தணை முறைதான் சிண்டி பார்ப்பிர்கள் என்று தங்களின் ஆதங்கத்தை கொட்டிதீர்க்கின்றனர்.
இந்நிலையில் சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க பட உள்ளதாக தயாரிப்புக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் படத்தில் நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று முடிவு செய்து நீக்கப்பட்டு மேற்படி நாளை திரையிடப்படும் படத்தின் காட்சிகள் நீக்கப்படுவது குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இதற்கு ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU