சர்கார் கதை திருட்டு குறித்து இயக்குனர் முருகதாஸின் மாஸ் பதில்..
கடந்த சில வருடங்களாக விஜய் படம் வெளிவருகிறது என்றால் பல்வேறு பிரச்சனைகள் கடந்த பிறகு தான் அந்த படம் திரைக்கு வரும்.அதே போல் தான் சர்கார் படமும்.இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த உடனேயே பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியது.
அதோடு முடியாமல் தற்போது அந்த படத்தின் கதை திருட பட்ட கதை என்று புகார் எழுந்துள்ளது.இதனால் படம் வெளியாகுமா என்ற கவலை அனைத்து ரசிகர்களிடமும் இருக்கின்றது.இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் அது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் பேப்பர் தகவல்கள் மற்றும் நாட்டுநடப்புகளை வைத்து கதை எழுதியதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது மேலும் விளம்பரத்திற்காக இது போன்று பிரச்சனைகளை கிளப்பி விடுகிறார்கள். படம் வெளி வருவதற்கு முன்பே படம் கதை என்னுடையது என்று கூறுவது பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ளார்.
இது போன்ற விளம்பரம் தேடுவதற்காக பிரச்சனைகளை கிளப்பும் ஆட்களை கட்டாயம் நான் எதிர்கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.
Source: http://tamil.cinebar.in