நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் சர்கார் என்று பாராட்டியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ், நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு என முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நல்ல வசூல் வேட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
படத்தில் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.சர்கார் உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. படம் வெளியான முதல் நாளே இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனை செய்துள்ளது.