சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது! கோர்ட் அதிரடி!!
இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் தமிழக அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன. அவை மறுதணிக்கை மூலம் கட் செய்யப்பட்டு பிறகு திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றபிரிவு வழக்குகள் போடப்பட்டன.
இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற உத்தரவின் படி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவு குற்றப்பிரிவு போலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
DINASUVADU