சமூக வலைதளங்களில் லீக் ஆனது சர்கார் படத்தின் சண்டை காட்சி அதிர்ச்சியில் படக்குழு ..!

Default Image

நடிகர்  விஜய்யின் 62 வது படமான ‘சர்கார்’ படத்தின் பிர்ஸ்ட் லுக்போஸ்டர் மற்றும் படத்தின் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அதனைதொடர்ந்து அடுத்தநாள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவதுபோஸ்டரும் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஓரு காட்சி வெளியாகிஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இரண்டு போஸ்டர்கலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் பிறந்த நாளன்று இந்த படத்தின் போஸ்ட்கள் சமூகவலைதளங்களில் சர்கார் படத்தின் #tag கள் பல லட்சம் நபர்களால் விரும்பப்பட்டு வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களையும், படக்குழுவினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் நடிகர் விஜய் ஒரு கருப்பு காவல் துறை வேனில் இருந்து இறங்கி வருகிறார். அந்த வீடியோவில் மிகவும் சோர்வாக காணப்படும் விஜய் தள்ளாடி நடந்தபடிநிற்கிறார்.தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்