சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளன.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடிகை திரிஷா, நடிகர் விஜய் சேதுபதி வரவேற்றுள்ளனர். இருவரும் நடித்துள்ள ‘96’ படத்தின் நிகழ்ச்சியில் திரிஷா கூறும்போது,
‘‘சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. இவ்விவகாரத்தில் ஆழ்ந்த கருத்தை கூற இன்னும் அது பற்றி முழுமையாக அறிய வில்லை. ஆனாலும் யாரையும் தடுக்க கூடாது’’ என்றார்.
விஜய்சேதுபதி கூறும் போது, ‘‘ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் புனிதமானவர்கள். என் வாழ்க்கையில் அம்மா, மனைவி, மகள், தங்கை என பாசமுள்ள பெண்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
DINASUVADU
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…