உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், இந்தி நடிகர் அக்ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0
ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய 2019 ஆகி விடும் என்கிறார்கள்
இந்நிலையில் 2.0 படத்தின் கதை என்று ஒரு கதை தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.அது என்னவென்றால்செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.
சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது.
அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறதுமேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த வில்லன் பறவை.
இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறார் வசீகரன். அந்த ரோபோவுக்கும் பறவை வில்லனுக்குமான மோதல் தான் படம் என்கிறார்கள். பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்ஷய் குமார்.
படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படுமாம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…