சண்டை இயக்குனர் மகள்கள் நடன இயக்குனர் ஆனார்கள் :

Default Image

பிரபல சண்டை இயக்குனர் ராம்போ ராஜ் குமார், ரயிலுக்கு நேரமாச்சு படத்தின் மூலம் சண்டை இயக்குனராக அறிமுகமான ராம்போ ராஜ்குமார், தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இளம் வயதிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.

ராஜ்குமாருக்கு நவலெட்சுமி, நவதேவி என்ற இரு மகள்களும், நவகாந்த் மகனும் உள்ளனர். இதில் மகள்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே நடனத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி இப்போது நடன இயக்குனர்கள் ஆகி விட்டனர். அதிலும் பாலிவுட் படத்தில்.
அனுராக் காஷ்யப் இயக்கும் மண்மர்ஷியான் படத்தில் நடனம் அமைக்கிறார்கள். இந்த படத்தில் அபிஷேக் பச்சன், விக்கி கௌஷல், டாப்ஸி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் டாப்ஸி ஒரு பங்காரா நடம் ஆடுகிறார். இதற்காக நவதேவியும், நவலட்சுமியும் அவருக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்த நடனம் பேசப்படும் என்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்