சண்டைகோழி-2 வில் சரத்குமார் நடிப்பு பற்றி விஷால் கூறியது…!!
சண்டைகோழி-2 படத்தில் சரத்குமார் நடித்திருந்தால் சண்டைகாட்சிகள் உண்மையாகவே நடந்திருக்கும் என விஷால் தெரிவித்தார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் சண்டைகோழி-2. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், வரலக்ஷ்மி சரத்குமாரும், கீர்த்தி சுரேஷும், இந்த படத்துக்கு கிடைத்த இரண்டு பெரிய சொத்துக்கள் என்று பேசினார்.
இதனையடுத்து வரலக்ஷ்மியை பற்றி கூறும்போது, முதலில் வரலக்ஷிமியின் கதாபாத்திரத்தை பற்றி அவரிடம் சொன்னபோது, தன் தந்தை சரத்குமாரையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை அவர் கூறியதாக விஷால் கூறினார்.
மேலும், அப்படி அந்த வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தால், சண்டை காட்சிகள் நிஜமாகவே இருக்கும் என்றும் என் முகத்தில் விழும் குத்துகளின் சத்தம் பல கிலோமீட்டர்கள் உண்மையாகவே கேட்கும் என்று விஷால் நகைச்சுவையாக பேசினார்.சண்டைகோழி-2 படம் வரும் அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ளது.
DINASUVADU