சண்டக்கோழி 2 ரிலீஸ் தேதி மாற்றம் ..!
சண்டக்கோழி 2 (Sandakozhi 2), லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால், ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், சூரி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் சக்தியின் ஒளிப்பதிவிலும், ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும், பிரவின் கே.எல்லின் படத்தொகுப்பிலும் வெளிவரவுள்ளது.’சண்டக்கோழி 2′ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடித்துள்ளார். படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. அதற்க்கான ஒப்புதல் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.மேலும், படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீடு தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.