சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதியை தடை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் நிதீஷ் குமார்…
பிகார் மாநிலத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதியை தடை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் நிதீஷ் குமார். பிஜேபி எம்.எல்.ஏ.யான நீராஜ் குமார் பாபுலால் முதல்வருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது
“இப்படமானது ராஜபுத்திர மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரித்து வெளிவந்துள்ளது.இப்படத்தில் ராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜியை காதலித்த வர்ணிக்கப்பட்டுள்ளது.ஆகவே இப்படமானது இந்துகளின் மனங்களை புண்படுத்துவது போன்று உள்ளது.ஆகவே இப்படத்தினை வெளியிட தடை பிறப்பிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
ஆகவே முதல்வர் நிதிஷ்குமாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்படத்தை வெளியிட தடை விதிக்க உத்தரவிட்டார். இந்தியா முழுவதும் இப்படத்தினை தடை செய்யகோரி பல ஹிந்து மத அமைப்புகள் போராடி வருகின்றனர்.பிகாரில் தற்போது ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பிஜேபியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.இதே போன்று பிஜேபி ஆட்சி செய்யகூடிய மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே மற்றும் அவரது ஆதர்ச நாயகன் ரன்வீர் சிங் மற்றும் ஷாஹித் கபூருடன் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் வரலாற்றில் பத்மாவதி என்பவருக்கு எந்த இடமும் இல்லை …மேலும் இதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட வேண்டியது .அதனால் அது தற்போது இவர்கள் ஏற்படுத்திவரும் பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.